பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று 2 ம் அலை திருநெல்வேலியிலும் மிக வேகமாக பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.அதன்படி நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுபடி திருநெல்வேலி அரசு மருத்துவமனை பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியினை உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார். உடன் சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பெருமாள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் இருந்தனர்.