இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் விதத்தில் நெல்லையில் விளையாட்டு போட்டிகள்

நெல்லை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளைஞர்களுக்கு விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

Update: 2022-03-20 11:00 GMT

இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டி திருநெல்வேலி சட்ட மன்ற உறுப்பினர்  நயினார்நாகேந்திரன் தொடங்கி வைத்தார். 

நெல்லை சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டி திருநெல்வேலி சட்ட மன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார். 

நெல்லை சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள இளைஞர்களிடம் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நெல்லை சட்டமன்றத்திற்கு உட்பட்ட 15 இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களை கொண்டு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் விளையாட்டுப் போட்டி  நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கைப்பந்து மற்றும் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதோடு பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

பின்னர் இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குள் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் விளையாட்டு துறையில் அதிகமாக ஈடுபடுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் 15 இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தினோம். இதில் 10,000 பேர் வரை கலந்து கொண்டார்கள். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்குகிறோம். 15 இடங்களில் இருந்து ஆட்களை தேர்வு செய்து இன்று முதல்முறையாக போட்டிகள் நடத்தி வருகிறோம். வரும் நாட்களில் மாவட்ட அளவில் விளையாட்டு வீரர்களில் தேர்ந்தெடுக்கும் ஒரு களமாக இது அமைக்கப்படும் என  நயினார்நாகேந்திரன் தெரிவித்தார்.

பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன். துணை மேயர் ராஜு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News