ஈஸ்டர் பண்டிகை தூய சவேரியார் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-04-17 06:39 GMT

நெல்லையில் ஈஸ்டர் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டை தூய சவேரியார. பேராலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்தவ மக்களின் முக்கிய நிகழ்வான கிறிஸ்துமஸிற்கு அடுத்து மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர். சிலுவையில் அறையப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து அதிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினமே `ஈஸ்டர்' பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள தூய சவேரியார் பேராலயத்தில் இரவு 12 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு மெழுகுவத்தி ஏற்றி இயேசுவின் உயிர்த்தெழுதலை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திரளான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டு இயேசுவின் உயிர்ப்பித்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து இன்று முழுவதும் ஈஸ்டர் பண்டிகையையோட்டி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News