தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
புத்தகத் திருவிழாவில் திருநெல்வேலி மாவட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
75வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற திருநெல்வேலி மாவட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு இன்று திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்ச்சி கொண்டாடும் வகையில் பொருநை புத்தகத் திருவிழாவில் ஒரு பகுதியாக சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற திருநெல்வேலி மாவட்ட தியாகிகளின் புகைப்படங்கள் கண்காட்சியிக்கு வைக்கப்பட்டது. இப்புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர்கள் ரூபி.ஆர்.மனோகரன், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் முன்னிலையில் (17.03.2022) திறந்து வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், இல்லம் தேடி கல்வி, சமூகநலத்துறை, வேளாண் விற்பனை பிரிவு, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் பல்துறை பனிவிளக்க கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களுக்கு சிறப்பு செய்து வருகிறார்.சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் நினைவு மண்டபங்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. சுதந்திரத்திற்காக பாடுப்பட்ட தியாகிகளை நாம் எப்போதும் மறந்து விடக்கூடாது. சுதந்திர போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் பெரும் பங்காற்றியுள்ளது.
தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை இளம் தலைமுறையினர் பார்த்து பயன்பெரும் வகையில் அமைந்துள்ளது. வ.உ.சி, மகாகவி பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், ஒண்டிவீரன் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள். இன்னும் எண்ணற்ற தியாகிகள் நம் மண்ணில் பிறந்து நம் நாட்டிற்காக போராடி அரும்பாடுபட்டு நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்துள்ளனர். தியாகிகளுக்கு நாம் எப்போதும் நன்றி கடன் பட்டவர்களாக இருப்போம். அவர்களின் தொண்டு வரும் சந்ததியினர்கள் அறியும் வகையில் தியாகிகளின் புகழை இவ்வாறு நடத்தப்படும் கண்காட்சிகள் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பாகவுள்ளது என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ,பெருமாள், மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜு, மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்) எம்.சுகன்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.கணேஷ்குமார், திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர்கள் கனகராஜ், சாந்தி, ஜான்சிரூபா,வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) செல்வம், மற்றும் அரசு அலுவலர்கள் , முக்கிய பிரமுகர்கள், மாணவ.மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.