நெல்லையில் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆலோசனை கூட்டம்.
நெல்லையில் நடைபெற்ற பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன;
எஸ்பிசிஏ (SPCA) பிராணிகள் வதை தடுப்பு சங்கம், அரசாங்கம் பிராணிகளை கொடுமை செய்வதை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சங்கமாகும். இந்த சங்கம் பிராணிகளை வதை செய்வதை தடுப்பது மற்றும் பாதுகாக்கும் குறிக்கோளை முதன்மையாகக் கொண்டதாகும். இந்த சங்கத்தின் திருநெல்வேலி கிளை 2001ம் வருடம் தொடங்கப்பட்டு கடந்த 20 வருடங்களாக களப்பணிகளை செய்து கொண்டு வருகின்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு இதன் தலைவராக உள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனையின் அரங்கத்தில் திருநெல்வேலி கிளை பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பிராணிகள் நல ஆர்வலர்கள் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் காரணமாக இந்த சங்கத்தின் செயல்பாடுகள் குறைந்த அளவே செய்யப்பட்டது. இந்த சூழலில் எஸ்பிசிஏ திருநெல்வேலி கிளையின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கி பிராணிகள் மீது அக்கறை உள்ள நபருடன் சேர்ந்து சங்கத்தின் செயல்பாடுகளை மீண்டும் துவங்க ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் படி மேலும் முன்னேற்றத்துடன் நடத்த முனைப்புடன் செயல்படவும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.
தெருவில் திரியும் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை, வெறிநாய் தடுப்பூசி போடுவது, பள்ளியில் பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கு மிருக வதையை தடுக்க விழிப்புணர்வு, நோய்களுக்கான தடுப்பூசி, நாய்க்குட்டிகளை தத்தெடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது. போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
திருநெல்வேலி பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பிராணிகள் வதையை எதிர்க்கும் நபர்கள், பசுக்களைப் பாதுகாக்கும் சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் நீங்கள் ஒரு பிராணிகளை அன்பு செய்யும் மனம் உள்ளவரா ?அப்படியானால் எஸ்பிசிஏ யில் உறுப்பினராவதற்கு 94423 28574 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்