தேர்தல் பாதுகாப்பு குறித்து தென் மண்டல போலீஸ் ஐ.ஜி முருகன் ஆலோசனை
திருநெல்வேலியில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் முருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவீன் குமார், திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் தென் மண்டல காவல்துறை தலைவர் முருகன் கூறியதாவது.
காவல் அதிகாரிகளுக்கு தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வாக்கு சாவடிகளில் உள்ள குறைகளை உரிய அலுவலரிடம் கூறி அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத செயல்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் கூடுதலாக முக்கியமான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க சிறப்பு பிரிவில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் களுக்கும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபடுவார்கள். தேர்தல் பணியின் போது காவலர்கள் கொரோனா வழிகாட்டுதல் முறைகளை முறையாக கடைபிடித்து முக கவசம் அணிந்து பணி செய்ய வேண்டும். காவலர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸப்களில் தேர்தல் குறித்து ஆடியோ வெளியிடுவது மற்றும் ஸ்டேட்டஸ் வைப்பது தவிர்க்க வேண்டும் இவ்வாறு தென் மண்டல காவல்துறைத் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் நெல்லை சரகத்தை சேர்ந்த ஒன்பது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் , முப்பத்தி நான்கு உதவி காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களும், பத்து காவல் ஆய்வாளர்கள் உட்பட 53 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.