சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி நினைவேந்தல்
சிங்கம்பட்டி ஜமீன் சித்தாந்த சிகாமணி டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
சிங்கம்பட்டி ஜமீன் சித்தாந்த சிகாமணி டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதியின் 2ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி மகராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜாவின் இரண்டாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் கண் தெரியாத முதியோர் இல்லம் மற்றும் அன்னாள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு சிங்கம்பட்டி மகாராஜா நினைவுச்சின்னம் அமைக்கும் பணிக்குழு பொறுப்பாளர் தாயுமான சுந்தரம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நினைவுச்சின்ன பணிக்குழு கௌரவ ஆலோசகர் ஆவின் ஆறுமுகம் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
சிங்கம்பட்டி மகாராஜாவின் அரும்பணிகளை பாரதி முத்தமிழ் மன்றத் தலைவர். கவிஞர்.புத்தநேரி.கோ. செல்லப்பா, சிங்கம்பட்டி மகாராஜா நினைவுச்சின்னம் அமைக்கும் பணிக்குழு செயலாளர். முனைவர் கவிஞர்.கோ. கணபதி சுப்பிரமணியன், பாரதியார் உலகப் பொது மன்ற பொது நிதியாளர் கவிஞர் பாப்பாகுடி இரா.செல்வமணி ஆகியோர் பேசினர்.
பாரதி முத்தமிழ் மன்றத் துணைச் செயலாளர்.கவிஞர்.சு.முத்துசாமி முன்னாள் ரோட்டரி தலைவர். அ. பாலசுப்ரமணியன் முன்னாள் துணை ஆட்சியர் தியாகராஜன், திருநெல்வேலி கோல்ட் அரிமா சங்க வட்டார தலைவர் எம். ஆறுமுகநயினார், பல்சமய பணி குழு ஒருங்கிணைப்பாளர் ஜெபசிங், காவல் உதவி ஆய்வாளர் தளவாய் மாடசாமி, முன்னாள் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிறைவாக சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச்செயலாளர் பத்தமடை.த.அருணாசலம்,நன்றிகூறினார்.பார்வையற்றோர் முதியோர் இல்லம் மற்றும் அன்னாள் முதியோர், ஆதரவற்றோர் மாற்றுத் திறனாளி இல்லத்திற்கு பிஸ்கட், பழங்கள், மற்றும் இரவு விருந்து வழங்கப்பட்டது.