காணி இன மக்களின் வாழ்வியல் குறித்த குறும்படம்: கனிமொழி எம்.பி வெளியீடு

காணி இன மக்கள் தங்களது வாழ்க்கை முறை அழகாக வாழ்ந்து கொண்டிருப்பதாக புத்தகத் திருவிழாவில் கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

Update: 2022-03-20 06:31 GMT

நெல்லைப் புத்தக் திருவிழா நிகழ்ச்சியில் காணி இன மக்களின் வாழ்வியல் குறித்த குறும்படத்தை வெளியிட்ட கனிமொழி எம்.பி.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற 5வது பொருநை நெல்லைப் புத்தக் திருவிழா 3 ஆம் நாள் நிகழ்ச்சியில் காணி இன மக்களின் வாழ்வியல் குறித்த குறும்படத்தினை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார்கள்.

5வது பொருநை நெல்லைப் புத்தக் திருவிழா 3 ஆம் நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான போட்டிகள், கலைநிகழ்ச்சிகளும், எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன், பால சாகித்ய விருதாளர் -எழுத்தாளர் எல்.பாலபாரதி அரங்க நிகழ்வு பள்ளி மாணவ,மாணவியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், கலை பண்பாட்டுத்துறை சார்பில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், விஜயா கிப்ட்சன் எழுதிய "நெல்லையில் ஒரு மழைக்காலம்" என்ற நூல் வெளியீடப்பட்டு மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழும் காணியின பூர்வகுடிமக்களின் வாழ்வியல் குறும்படத்தை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கலை மன்றம் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. காணியின மக்களின் இயற்கையின் மேலுள்ள அன்பையும் அதன் மேல் அவர்கள் வைத்துள்ள ஆர்வத்தையும் விவரிக்கும் வகையிலான படம், அவர்களின் வாழ்வியிலுள்ள திருவிழாக்கள் மற்றும் சடங்கு முறைகளை விளக்கும் படம், அவர்களின் பாரம்பரியம் மற்றும் சமூக நடைமுறைகளை விளக்கும் படம், அதனைத் தொடர்ந்து அவர்களின் அன்றாட உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் இயற்கையோடு இணைந்த அவர்களின் மருத்துவ முறைகளை விவரிக்கும் படம், ஆண்கள், பெண்கள் என அவர்கள் தினசரி செய்யும் தொழில் மற்றும் அவர்கள் குழந்தைகளின் கல்வி ஆகியவற்றை விளக்கும் படம் என மொத்தம் ஐந்து வெவ்வேறு தலைப்பிலான படங்கள் என ஒரு முழு நீள திரைப் படத்திற்குரிய அனைத்தையும் உள்ளடக்கி அவர்களை நாம் நன்றாக தெரிந்து கொள்ளும் வகையில் சுமார் 30 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய "காணி" என்ற குறும்படத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வெளியிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திருநெல்வேலியில் 5வது புத்தகத் திருவிழாவில் கானிஇன மக்களின் வாழ்வியல் குறித்து குறும்படம் வெளியிடப்பட்டது. சுற்றுப்புறச்சுழல் அழியாமல் நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புற சுழலை அளிக்காத வளர்ச்சியை நாம் கையாளவேண்டும். தொழிற்சாலைகளில் மாசு இல்லாமல் செய்வதற்கு என்ன பணிகள் செய்ய வேண்டுமோ அதை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த காலக்கட்டத்தில் மலைகளில் வாழும் காணி இன மக்களின் வாழ்வியல் எந்த தடைகளும் வராத வண்ணம் நாம் நடந்து கொள்ள வேண்டும். காணி இன மக்கள் தங்களது வாழ்க்கை முறை அழகாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தயாரிக்கும் உணவு, அவர்கள் வழிபடும் கோயில்கள் எல்லாம் தன்னை சுற்றியே அமைத்து அழகாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காணிஇன மக்களுக்கு எந்தவித இடையூறு வராத வண்ணம் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

காடுகளில் யாரும் வசிக்க கூடாது என்ற சட்டம் வந்த பிறகு 84 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். காடுகளே தனது வாழ்க்கை என வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் வெளியேற்றப்பட்ட சூழ்நிலை அன்று உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் காணி இன மக்கள் இன்னும் காடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் இயற்கையிலிருந்து தொலைதூரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காணிஇன மக்கள் இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காணிஇன மக்களின் வாழ்க்கை குறும்படம் சிறப்பாக இருந்தது.இதற்கான ஏற்பாடுகளை செய்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலி மாவட்டத்தில் பொருநை நெல்லைப் புத்தகத்திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைந்து நடத்தி வரும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

பழங்குடியின மக்கள் இல்லாமல் காடுகள் இல்லை, காடுகளை பாதுகாக்க வேண்டும், வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டும், பறவைகளை பாதுகாக்க வேண்டும், சுற்றுசுழலை பாதுகாக்க வேண்டும் என்று அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. காடுகளில் வாழ்ந்து வரும் காணிஇன மக்கள் காடுகளுக்கு பாதுகாவலராக இருந்து வருகிறார்கள். தற்போது காடுகளை பாதுகாத்து வரும் காணி இன மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ,பெருமாள், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, முன்னாள் சட்டப்பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன் , மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜீ, மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை ஆணையர்) எம்.சுகன்யா, திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) செல்வம், மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், மாணவ,மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News