எனக்கு ஓட்டு போட வேண்டாம்- சீமான் பரபரப்பு பேச்சு

Update: 2021-03-20 07:30 GMT

நாம் தமிழருக்கு ஓட்டு போட்டால் பாஜக வெற்றி பெறும் என சந்தேகம் இருந்தால் யாரும் எனக்கு ஓட்டு போட வேண்டாம் என திருநெல்வேலியில் சீமான் பரபரப்பாக பேசினார்.

பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாத்திமாவை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மேலப்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; நாட்டில் ஊழல் லஞ்சத்தை தவிர வேறு எந்த நிர்வாகமும் இல்லை. பிறப்பு சான்றிதழ் பெறுவது முதல் இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை அனைத்தும் ஊழல் தான். இங்கு அனைத்துமே மக்களுக்கு பிச்சை இடப்படுகிறது.

சிறுபான்மை இன மக்களின் பாதுகாவலர் என்று கூறுபவர்கள் இஸ்லாமியர்களுக்கு வெறும் இரண்டு இடங்கள் தான் கொடுத்துள்ளார்கள். நான் 14 இடம் கொடுத்துள்ளேன். சீமானுக்கு ஓட்டு போட்டால் வாக்குகள் பிரிந்து விடும். பாஜக வந்து விடும் என்று பயமுறுத்துவார்கள். அப்படி சந்தேகப்படுபவர்கள் யாரும் எனக்கு ஓட்டுப் போட வேண்டாம். சீமான் நாம் தமிழர் கட்சியில் இருக்கும் வரை பாஜக வரவே முடியாது என்று நம்புவர்கள் மட்டும் ஓட்டு போட்டால் போதும்.இது ஒரு மாறுதலுக்கான தேர்தல். எனவே எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று சீமான் பேசினார்.

Tags:    

Similar News