நெல்லையில் எஸ்டிடியூ தொழிற்சங்க மண்டல கூட்டம்
மேலப்பாளையத்தில் எஸ் டி டி யு தொழிற்சங்க மண்டல கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.;
எஸ்.டி.டி.யூ தொழிற் சங்க நெல்லை மண்டல கூட்டம்
எஸ்.டி.டி.யூ தொழிற் சங்க நெல்லை மண்டல கூட்டம் மேலப்பாளையம் அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சாந்து இபுராஹிம், எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாநகர் மாவட்ட அமைப்பு செயலாளர் எஸ்.எஸ்.எ.கனி கலந்து கொண்டனர்,
கூட்டத்தில் தொழிற்சங்க வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக மாவட்ட மாநாடு நடத்துவது, நலவாரியம் அடையாள அட்டை பெறுவது, ஸ்மார்ட் சிட்டி பணிகளை துரித படுத்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தென்காசி மாவட்ட தலைவர் ராஜா, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆராம்பண்ணை சித்தீக், நெல்லை புறநகர் நிர்வாகி பல்லக்கால் யாசின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அபுபக்கர் சித்தீக் நன்றி உரை ஆற்றினார்.