மேலப்பாளையத்தில் எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு
நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.டி.யூ. பொதுக்குழு கூட்டம் மற்றும் நோனபு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லையை அடுத்துள்ள மேலப்பாளையம் கரீம் நகரில் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிஃப் பாஷா தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் செய்யது வரவேற்புரையாற்றினார், மாவட்ட துணைத்தலைவர் கல்வத், செயற்குழு உறுப்பினர்கள் சித்திக், புதுமனை சிந்தா, மசூது ஞானியார், மொண்னா முகம்மது, மைதீன் பாதுஷா, பேட்டை ரசூல், முஸ்தபா எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, தொகுதி நிர்வாகிகள்,மின்னதுல்லா, சிந்தா, சலீம்தீன், ஊடக அணி நிர்வாகிகள் லெப்பை,மீரான், ஆகியோர் முன்னிலை வகித்தனர். '
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் அப்துல் சிக்கந்தர் சங்கத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்தும் மண்டல மாநாடு குறித்தும் எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் சங்கத்தின் மண்டல மாநாட்டில் திரளாக தொழிலாளர்கள் அனைவரும் பங்கெடுப்பது மற்றும் மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
கூட்டத்தில் ஆட்டோ சங்கம், பீடி தொழிலாளர்கள், மாட்டிறைச்சி கடை தொழிலாளர்கள், உடலுழைப்போர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் சுல்தான் பாஷா நன்றி கூறினார்.