மசூதிகளில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மேலப்பாளையம் அல் ஜாமிஅதுல் அலியார் மற்றும் வாவர் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு தொழுகை முடிந்து வெளியே வந்தவர்களிடம் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி வாக்கு சேகரித்தார்.அப்போது பேசிய அவர் தொகுதியில் பல்வேறு இடங்களில் அடிப்படை கட்டமைப்புகள் புறக்கணிக்க பட்டுள்ளதாகவும். தனக்கு ஒரு வாய்ப்பு வழங்கினால் முன்மாதிரி தொகுதியாக பாளையங்கோட்டையை மாற்றுவேன் என வாக்குறுதியளித்தார்.
இந்நிகழ்வில் புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் ,பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் பாளை சிந்தா, வர்த்தக அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜவுளி காதர், வார்டு நிர்வாகிகள் வதூத் கான், செய்யது அலியார் புதுமனை சிந்தா உள்ளிட்ட நிர்வாகிகள் அமமுக, தேமுதிக,எம்ஐஎம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.