பாளையங்கோட்டை சௌராஷ்டிர கிருஷ்ணன் கோவிலில் ராமநவமி விழா

பாளையங்கோட்டை சௌராஷ்டிர கிருஷ்ணன் கோவிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Update: 2022-04-21 01:16 GMT

பாளையங்கோட்டை சௌராஷ்டிர கிருஷ்ணன் கோவிலில் ராமநவமி விழா நடைபெற்றது.

பாளையங்கோட்டை சௌராஷ்டிர கிருஷ்ணன் கோவிலில் ராமநவமி விழா. பக்தி சொற்பொழிவு, பக்தி பாடல், பரதநாட்டிய சிறப்பு நிகழ்ச்சிகள்.

பாளையங்கோட்டை சௌராஷ்டிரா கிருஷ்ணன் கோவிலில் ராமநவமி பத்தாம் திருநாள் சிறப்பு கலை நிகழ்ச்சியாக பக்தி சொற்பொழிவு, பக்தி பாடல், பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு கட்டளைதார் நத்தம்.சே.மணிலால் தலைமை தாங்கினார். சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச் செயலாளர் சு.முத்துசாமி இறைவணக்கம் பாடினார். நிகழ்வினை ஐ.ஐ.பி. இலட்சுமி ராமன் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் எஸ்.ஆர்.அனந்தராமன் தொடங்கி வைத்தார். கிருஷ்ணவேணி மணிலால், மதுரை ஆர்.ரவீந்திரன், மதுரை டி.என். ஜெகன், மதுரை என்ஜினீயர் யேக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவப்பிரகாசர் நற்பணி மன்ற செயலாளர் முனைவர் கவிஞர்.கோ கணபதி சுப்பிரமணியன் ராம பெருமான் மகிமை குறித்தும், எழுத்தாளர் மு.வெ.ரா ராமாயணத்தில் நற்சிந்தனை என்ற பொருளில் பேசினார். திரைப்பட பின்னணி பாடகர் பேராசிரியர் ஆதிவராகமூர்த்தி பக்தி பாடல் பாடினார். மாணவிகள் ஜெயந்தி, அஷ்மிகா, சினேதா, மாணவர்கள் பிரதீப் திவாகர், அனீஸ் கிறிஸ்டோ பிரபாகர்

ஆகிய மாணவ- மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் எஸ்.ஆர். அனந்தராமன், கட்டளைதார் முன்னாள் கூட்டுறவு சார் பதிவாளர் மணிலால் ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்வில் திருக்கோயில் தலைவர் சி.ஜெ.ரெங்காச்சாரி, திருக்கோயில் பட்டர் பார்த்தசாரதி மற்றும் துணைத் தலைவர் எஸ். ஜி. மணிகண்டன், ஜெ.எம்.சந்திரசேகர், செயலாளர் எஸ்.எஸ் சத்யம், துணைச் செயலாளர் எஸ்.ஏ. லோகநாதன், பொருளாளர் ஜி எஸ் பாஸ்கரன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் பலர் கலந்து கொண்டனர். எஸ்.ஆர்.லெட்சுமணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News