சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி சார்பாக ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கல்
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் செயல்பட்டு வரும் மனிதம் அமைப்பு சார்பாக ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கப்படன.;
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் செயல்பட்டு வரும் மனிதம் அமைப்பு சார்பாக முழு ஊரடங்கு காரணமாக ரோட்டில் பசியால் வாடித்தவித்த ஆதரவற்ற மக்களுக்கு கல்லூரி முதல்வர் முஹம்மது சாதிக் முதல்வரின் உதவியாளர் சரவணவேல் மற்றும் முன்னாள் மாணவர் மதன் உள்ளிட்டோர் ரோட்டில் உள்ள ஆதரவற்ற நபர்களுக்கு இன்று மதிய உணவுகளை வழங்கினார்கள்.
2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இவ்வமைப்பு தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் தினமும் 100 நபர்களுக்கு மதிய உணவுகளை வழங்கி வருகின்றனர். மனித நேயத்துடன் செயல்பட்டு வரும் இந்த அமைப்பினை கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் என பலரும் பாரட்டி வருகின்றனர்.