பேஸ்புக்கில் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செய்தி பரப்பிய நபர் கைது
சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் முகநூல் பக்கத்தில் செய்தி பரப்பியதாக பாபா யூசுப் மேலப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையத்தில் (Face book) ல் சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செய்தி பரப்பிய நபர் கைது.
நெல்லை மாநகரம் மேலப்பாளையம் ஆமீன்புரத்தை சேர்ந்த யூசுப் என்ற பாபா யூசுப் (46) என்பவர் முகநூல் பக்கத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவரான அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்தும், சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் முகநூல் பக்கத்தில் செய்தி பரப்பியதாக பெருமாள்புரம் தியாகராஜநகரை சேர்ந்த லெனின் ரகுராமன் என்பவர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் ரசிதா வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.