வ.உ.சி இலக்கிய மாமன்றத்தின் சார்பில் அன்னையர் தின விழா

வ.உ.சி இலக்கிய மாமன்றத்தின் சார்பில் அன்னையர் தின விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம் நடைபெற்றது;

Update: 2022-05-10 06:15 GMT

வ.உ.சி இலக்கிய மாமன்றத்தின் சார்பில் அன்னையர் தினத்தையொட்டி நடைபெற்ற கவியரங்கம் கருத்தரங்கில் பங்கேற்றோர்

வ.உ.சி இலக்கிய மாமன்றத்தின் சார்பில் அன்னையர் தினத்தையொட்டி கவியரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றது.

வ.உ.சி இலக்கிய மாமன்றத்தின் சார்பில் அன்னையர் தின விழா மற்றும் ஊர்க்காவல் படையில் 30 ஆண்டுகாலம் சேவை செய்த உதவி அணித்தலைவர் பூ.ஆறுமுகம் பணி நிறைவு பாராட்டு விழா ஆகிய இரு பெரும் விழா பாளையங்கோட்டை ஆக்ஸ்போ மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்விற்கு வ.உ.சி. இலக்கிய மாமன்றத் தலைவர் சேவைச்செம்மல் புளியரை எஸ்.ராஜா தலைமை வகித்தார். நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் எஸ்.ஆனையப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநகர ஆயுதப்படைக் காவல் உதவி ஆணையர் க.முத்தரசு கலந்துகொண்டு 30 ஆண்டு சேவை செய்த பூ.ஆறுமுகத்தின் பணியைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி தலைமையில் அன்னையர் தின கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  கவிதை வாசிப்பில் கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன், நல்நூலகர் முத்துகிருஷ்ணன், கவிஞர்கள் சக்தி வேலாயுதம், சண்முக சுப்பிரமணியன், வேதிகா, மூக்குப்பீறி தேவதாசன், மதன், செ.ச.பிரபு, சு.முத்துசுவாமி ஆகியோர் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர்.

தொடர்ந்து வ.உ.சி இலக்கிய மாமன்ற செயலாளர் முனைவர் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமையில் அன்னையர் தின சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் பணி நிறைவு பெற்ற துணை ஆட்சியர் தியாகராஜன், உதவி கோட்ட பொறியாளர் மனோன்மணி ராஜன், வழக்கறிஞர் கந்தசாமி, சாந்தி நகர் ஏ.எஸ்.முத்து, பணி நிறைவு பெற்ற உதவி ஆய்வாளர் பாக்கியராஜ், மீனாட்சிபுரம் நகராட்சி பள்ளி பணியாளர் ராஜு, ராஜமுருகன், கண்ணகி ஆகியோர் கருத்துரை வழங்கினார். நிறைவாக கவியரங்கம், கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அனைத்து அறிஞர்களுக்கும் தலைவர் புளியரை எஸ்.ராஜா பரிசு வழங்கி பாராட்டினார். அகவை முதிர்ந்த தமிழறிஞர் சங்க மாநிலத் தலைவர் சுப்பையா நன்றி கூறினார்.

Tags:    

Similar News