பாளையங்கோட்டையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

பாளையங்கோட்டை துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-03-25 08:54 GMT

பாளையங்கோட்டை துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (26.03.2022) சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து வி.மு.சத்திரம், கட்டபொம்மன்நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத்நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைகொழுந்துபுரம், மனப்படைவீடு, கீழநத்தம், பாளை பேருந்துநிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர் மற்றும் முருகன்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News