பைபர் கிளாஸ் மற்றும் பி.ஒ.பி அச்சு -வார்ப்பு பயிற்சி முகாம்

-பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது.

Update: 2021-04-19 07:59 GMT

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் குருவனம் திறந்தநிலை அருங்காட்சியகம் அம்பை இணைந்து, "பைபர் கிளாஸ் மற்றும் பி.ஒ.பி அச்சு - வார்ப்பு பயிற்சி" முகாமை, பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடத்தி வருகிறது.

இவ் விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை தாங்கினார். சென்னை கவின் கலைக் கல்லூரி மேனாள் முதல்வர் ஓவியர் சந்துரு தொடக்கவுரை வழங்கி, பயிற்சியைத் தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மாணவ மாணவிகள் 15 பேர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி குறித்து மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி கூறுகையில், "இப்பயிற்சி 23/04/2021 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும். இப்பயிற்சியில் பாடத் திட்டம்/ விளக்க உரை மற்றும் செயல் முறைப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இப் பயிற்சியினை சிற்ப கலைஞர் ஓவியர் சந்துரு மற்றும் பிரபு ஆகியோர் வழங்குகிறார்கள். நிறைவு நாளில் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது" எனக் கூறினார்.

Tags:    

Similar News