கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு பவனி திருநெல்வேலியில் நடைபெற்றது.
குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு பாளையங்கோட்டை புனித சவேரியார் பேராலயத்தின் சார்பில் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி புனித குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி, புனித யோவான் கல்லூரி , வாட்டர் டேங்க் வழியாக புனித சவேரியார் பேராலயத்தை சென்றடைந்தனர்.
பேரணியில் சென்றவர்கள் பிரார்த்தனை செய்து வழங்கப்பட்ட ஓலையுடன் ஓசனா பாடி சென்றனர் . இறுதியாக பேராலயத்தில் குருத்தோலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர் . இதனை தொடர்ந்து ஈஸ்டர் வரை 7 நாட்கள் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் பெரிய வியாழன் , புனிதவெள்ளி ஆகியவை அனுசரிக்கப்படுகிறது.