பாளையங்கோட்டை தொகுதி எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர் முஹம்மது முபாரக் வேட்புமனு தாக்கல்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி அமமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன் வேட்பாளர் முஹம்மது முபாரக் வேட்பு மனு தாக்கல் செய்தார்.;
அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பாளையங்கோட்டை தொகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக தொகுதியில் முக்கியஸ்தர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கட்சியின் துணை அமைப்பினரும் பாளையங்கோட்டை தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர் முபாரக்கிற்கு வாக்குகளை சேகரித்தனர். இதனை தொடர்ந்து வேட்பாளர் முபாரக் தனது வேட்பு மனுவை திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் கண்ணனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது அஹமது நவவி, மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீத் உஸ்மானி. மாவட்ட பொது செயலாளர் ஹயாத் முஹம்மது, மாவட்ட செயலாளர்கள் பேட்டை முஸ்தபா அமமுக மேலப்பாளையம் பகுதி செயலாளர் ஹைதர் அலி தேமுதிக மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஆகியோர் உடன் சென்றனர்.
செயல் வீரர்கள் கூட்டம்
அதை தொடர்ந்து நெல்லை வண்ணார் பேட்டையில் தனியார் மஹாலில் அமமுக எஸ்டிபிஐ தேமுதிக ஏ.ஐ.எம்.ஐ.எம் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ மாநகர் மாவட்ட செயலாளர் புஹாரி சேட், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ஆரிப்.கூட்டணி கட்சிகளான அமமுக மாவட்ட செயலாளர் பரமசிவ ஐயப்பன், மாவட்டவழக்கறிஞர் அணி செயலாளர் சங்கர்.இலக்கிய அணி செயலாளர் ஹசன்பாளை பகுதி செயலாளர் சுரேஷ்தச்சை பகுதி செயலாளர் பேச்சிமுத்து பாண்டியன், மேலப்பாளையம் பகுதி செயலாளர் சேக் பாளை பகுதி செயளாலர் சரவணன் தச்சை பகுதி செயலாளர் தமிழ் செல்வன். அகில இந்திய மஜிலிஸ் கட்சி மாவட்ட செயலாளர் அக்மல் மாவட்ட இணை செயலாளர் சபீக். எஸ்.டி.பி.ஐ பாளை தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு கூட்டணி கட்சியின் வேட்பாளர் முகமது முபாரக் அவர்கள் வெற்றிக்காக உழைப்பதாக உறுதியேற்றனர்.