நெல்லை புத்தகத் திருவிழா: பொருநை நாகரீகத்தை மணல் ஓவியமாக தீட்டிய ஓவியர்

நெல்லை புத்தக திருவிழா லட்சகணக்கில் புத்தக பிரியர்கள்குவிந்தனர். நான்கு நாட்களில் 50 லட்சம் மதிப்பிலான புத்தகம் விற்பனை.

Update: 2022-03-21 06:27 GMT

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி இணைந்து பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. கடந்த 17ம் தேதி தொடங்கிய புத்தகத் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. 127 அரங்குகள் அமைத்து பல்வேறு தலைப்புகளில் லட்சகணக்கான புத்தகங்கள் இந்தப் புத்தகத் திருவிழாவில் இடம்பெற்றுள்ளன. முன்னணி பதிப்பகத்தினர் புத்தகத் திருவிழாவில் அரங்குகள் அமைத்து புத்தகங்கள் காட்சி படுத்தி உள்ளனர். இந்த புத்தகக் கண்காட்சியில் நான்கு நாட்களில் ஒரு லட்சத்தி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தக பிரியர்கள் வருகை புரிந்துள்ளனர். அதன் மூலம் 50 லட்ச மதிப்பிலான புத்தகங்கள் நான்கு நாட்களில் விற்பனை நடைபெற்றுள்ளது. மேலும் புத்தகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சிறுவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், புத்தகத் திருவிழாவில் பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

இதில் ஒன்றாக நெல்லை பகுதியில் முதன்முதலாக"மணல் ஓவியம்" நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரையும் கவரும் விதத்தில் நம் கண் முன்னே ஒரு மாயாஜால நிகழ்வு போல பொருநை நாகரீகம் தமிழ் பாடலுக்கு ஏற்ப ஓவியர் ராகவேந்திரா பல வண்ண மணல்களின் துணைகொண்டு தனது கற்பனையை நம் கண் முன்னே நிகழ்த்தினார். அது போல விநாயகர் வழிபாடு தேசபக்தி பாடல் ஒலிக்கப்படும் பாடல்களின் வரிகளுக்கு இணையாக மணலில் ஓவியத்தை வரைந்து அசத்தினார்.

இதில் பரவசமடைந்த பார்வையாளர்கள் ஐந்தாவது புத்தக கண்காட்சியின் புதிய விருந்து, புதிய முயற்ச்சி மணல் தூவி இசைக்கு ஏற்ப வடிவங்கள் மாறி மாறி நமது கலாச்சாரத்தையும், நமது பொருநையின் தொன்மையையும் கலைஞர் பதிவு செய்தது இந்த புத்தக திருவிழாவிற்கு பெருமை என்றனர்.

Tags:    

Similar News