"நம்ம நெல்லை" செல்பி பாயின்ட்: மாநகர காவல் துணை ஆணையர் திறப்பு
திருநெல்வேலி ஜில்லா உருவான தினத்தை முன்னிட்டு "நமது நெல்லை" செல்பி பாயின்ட்டை துணை ஆணையர் சுரேஷ்குமார் திறந்து வைத்தார்.
தி சென்னை சில்க்ஸ் 11வது ஆண்டு துவக்க விழாவை மற்றும் திருநெல்வேலி ஜில்லா உருவான தினத்தை முன்னிட்டும் "நமது நெல்லை" செல்பி பாயின்ட் திறப்பு விழா நடைபெற்றது.
தி நெல்லை சில்க்ஸ் நிறுவனம் நெல்லை வண்ணாரப்பேட்டையில் துவங்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியுள்ளது. பதினோராவது ஆண்டு துவக்க விழா மற்றும் திருநெல்வேலி ஜில்லா உருவான தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் முன்பு "நம்ம நெல்லை" என்ற செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர போலீஸ் சட்டம்- ஒழுங்கு துணை ஆணையர் சுரேஷ்குமார் செல்பி பாயின்ட்டை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் வினித்குமார், தினமலர் தினேஷ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தி சென்னை சில்க்ஸ் நிறுவன பொது மேலாளர் அருண்குமார், மேலாளர்கள் ரமேஷ்குமார், ஜெயராமன், தோப்பு சாமி, ஸ்ரீ குமரன் தங்கமாளிகை மேலாளர்கள் வசந்த், மகேஷ், நம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு வந்த வாடிக்கையாளர்கள் செல்பி பாயிண்ட் முன்பு செல்பி எடுத்து கொண்டனர்.