நெல்லை-அரசு அருங்காட்சியகம் சார்பில் இணையவழி கைவினைப் பயிற்சி

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, இணையம் வழியாக கைவினைப் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-07-30 04:25 GMT

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் என்.பி.என்.கே. கலைப்பண்பாடு மன்றம் சார்பில், இணையவழி கைவினைப் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில்,   மைதா மாவில் அழகிய உருவங்கள் தயாரிப்பது குறித்து குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை,  மாவட்டக் காப்பாட்சியர் சத்தியவள்ளி துவங்கி வைத்தார். தென்காசி ஹில்டன் மெட்ரிக் பள்ளியின் கவின்கலை ஆசிரியர் பிரபு பயிற்சி அளித்தார். இந்த நிகழ்வில், மைதா மாவு கொண்டு பாம்பு, பல்லி, தவளை போன்ற உருவங்கள் தயாரிப்பு மற்றும் அதில் வண்ணம் தீட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவ்ட்டங்களை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ- மாணவியர் மற்றும் மகளிர் மிகவும் ஆர்வத்துடன் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். NPNK கலை பண்பாடு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.வெ.ரா. நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார்.

Tags:    

Similar News