நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கழிவு பொருட்களில் இருந்து, விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் இணையவழி பயிற்சி

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கழிவு பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்கள் தயாரிப்பது குறித்த இணைய வழி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

Update: 2021-06-18 08:15 GMT

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கழிவு பொருட்களில் இருந்து விளையாட்டு பொருட்கள் தயாரிப்பு குறித்து நடந்த இணையவழி பயிற்சி.

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் NPNK கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்திய இணையவழி கைவினைப் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.

இப்பயிற்சியில் கழிவு பொருட்களில் இருந்து அழகான கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியினை மாவட்டக் காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி துவங்கி வைத்தார்.

பயிற்சியினை இணையவழியில் நெல்லை மாவட்ட சிரட்டை சிற்பி. வே. ஆனந்த பெருமாள் நடத்தினார். இன்று நடைபெற்ற பயிற்சியில் பழைய அட்டை, பெட்டிகள் கொண்டு சிறுவர்கள் விளையாட்டு பொருட்களான விமானம், குருவிகள் மற்றும் கைபேசி வைக்கும் ஸ்டாண்ட் ஆகியவை உருவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவ்ட்டங்களை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ- மாணவியர் மற்றும் மகளிர் மிகவும் ஆர்வத்துடன் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். NPNK கலை பண்பாடு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.வெ.ரா. நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார்.

Tags:    

Similar News