நெல்லை-மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூன்று வாலிபர்கள் தீக்குளிக்க முயற்சி

முத்து மனோ கொலையுண்ட சம்பவத்தில் 7 சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக் காவலர்கள் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2021-06-14 06:25 GMT

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூன்று வாலிபர்கள் தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் படுகொலை செய்யப்பட்ட கைதி முத்து மனோ கொலை வழக்கில் நீதி கேட்டு, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முருகன், கார்த்திக் மற்றும் அம்மு ஆகிய மூன்று வாலிபர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கொலையுண்டு இறந்துபோன முத்துமனோ கொலை வழக்கு சம்பந்தமாக இறந்த முத்து மனோ உடலை 55 நாட்களாக உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய சிறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையில் முத்து மனோ கொலையுண்ட சம்பவத்தில் பணியில் அஜாக்ரதையாக செயல்பட்ட 7 சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக் காவலர்கள் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாளை மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் சிறை கண்காணிப்பாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் முத்து மனோ குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர.கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வாலிபர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News