நெல்லை: மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 62 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 62 பயனாளிகளுக்கு ரூ.2.73 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

Update: 2022-04-04 11:38 GMT

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 62 பயனாளிகளுக்கு ரூ.2.73 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு இன்று (04.04.2022) வழங்கினார்.

இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகள் உதவித்தெகை, முதிர்கன்னி உதவித்தொகை, விபத்துமரண உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மற்றும் பட்டா மாறுதல் வேலைவாய்ப்பு, மற்றும் குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை.பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு அறிவுறுத்தினார். முன்னதாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகளை இருக்கையில் அமரவைத்து அவர்களது இருக்கைக்கு சென்று அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில், வருவாய்த்துறை சார்பில், மானூர் வட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு வரன்முறை பட்டாக்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 46 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.43 இலட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களும், மற்றும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.5ஆயிரம் மதிப்பில் காதொலிகருவிகளையும் ஆக மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ.2.73 இலட்சம் மதிப்பில்.பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலஎடுப்பு) ஷேக்அயூப், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பிரம்மநாயகம், மானூர் வட்டாட்சியர் சுப்பு மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News