நெல்லை- ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை!
நெல்லை வண்ணார்பேட்டையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலையில் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.;
ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்த காட்சி.
தமிழகம் முழுவதும் கொரானா 2வது அலை மிக தீவிரமாக பரவி வரும் சுழ்நிலையில அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். காவல்துறையினர் விதிமுறை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், அபராதம் விதித்து வருகின்றனர்.
அந்த வகையில், நெல்லை வண்ணார்பேட்டையில் போலீசார் சாலையை மறித்து தடுப்புகள் வைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு கட்டுபாடுகளை கடுமையாக அமல்படுத்திய நிலையில் நெல்லை மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் மகேஷ்குமார் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் உதவி ஆய்வாளர் கென்னடி மற்றும் போலீசார் தேவையின்றி வாகனங்களில் வெளியில் சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து அதிரடியாக கொரானா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஸ்வரி இதுபற்றி கூறுகையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. தொடர்ந்து இதுபோல் ஊரடங்கு மீறுபவர்களுக்கு பதிவு பரிசோதனை தொடர்ந்து எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் விதிமுறைகளை மதித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.