நெல்லை: மனைவியை துன்புறுத்திய வழக்கு: கணவருக்கு ஓராண்டு சிறை தண்டனை
ஓராண்டு சிறை தண்டனை, ரூ 2 லட்சம் நஷ்ட ஈடு மற்றும் மனைவிக்குச் சொந்தமான 20 பவுன் நகைகளையும் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு
மனைவியை பணம், நகை கேட்டு துன்புறுத்திய வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட கணவகுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ 2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க, நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நெல்லை மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட சி.என். கிராமத்தை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவர் தனது கணவர் சின்னதுரை மற்றும் குடும்பத்தார்கள் சேர்ந்து பணம், நகை கேட்டு துன்புறுத்தியதாக கொடுத்த புகாரின் பேரில், டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2013 ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கை 09-09-2021-ம் தேதியன்று, நெல்லை கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி.ராஜேஷ்குமார் விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட சின்னதுரைக்கு, ஓராண்டு சிறை தண்டனையும், ரூ 2 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவும் மற்றும் பேச்சியம்மாளுக்கு சொந்தமான 20 பவுன் நகைகளையும் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.