பெண் காவலர் படுகொலையை கண்டித்து நெல்லை தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் பெண் காவலர் பாலியல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-09 14:40 GMT

நெல்லை அருகே டெல்லி பெண் போலீஸ் படுகொலையை கண்டித்து தவ்ஹீத் ஜமா அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பில் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட பெண் காவலர் சபியா படுகொலைக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை கைது செய்யாத மத்திய பாஜக அரசை கண்டித்தும், தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நெல்லை மேலப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மசூத் உஸ்மானி தலைமை வகித்தார். மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் கண்டன உரையாற்றி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சுலைமான், செய்யதலி, நெல்லை யூசுப் அலி, அன்சாரி மற்றும் பெண்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News