நெல்லை- போக்குவரத்துக் கழக ஊழியர்கள், குடும்பத்தினருக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்.
நெல்லை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது;
நெல்லை அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு கொரனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டது. இந்த சூழ்நிலையில் நேற்று இரவு தமிழக அரசு நெல்லை மாவட்டத்திற்கு 7000 தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. அதன்படி கோவிஷீல்டு 6,000, கோவாக்சின் 1000 என மொத்தம் 7 ஆயிரம் தடுப்பூசிகள் நேற்று நெல்லை வந்தடைந்தது. இதையடுத்து இந்தத் தடுப்பூசிகளை இன்று மாவட்டம் முழுவதும் உள்ள மையங்களுக்கு சுகாதார அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் நெல்லை மாவட்ட அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு வண்ணாரப்பேட்டையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இன்று சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு மாவட்ட சுகாதார அதிகாரிகள் மொத்தம் 130 தடுப்பூசிகளை வழங்கினர். அதன்பேரில் போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன.