நெல்லையில் தேசிய கண்தான இரு வார விழா

நெல்லையில் 36 வது தேசிய கண்தானம் இரு வார விழா டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டது.

Update: 2021-08-25 07:30 GMT

நெல்லை வண்ணாரப்பேட்டையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பாக தேசிய கண்தான வார விழா கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ம் தேதி வரை தேசிய கண்தானம் இரு வார விழாவாக கண் மருத்துவதுறை கொண்டாடி  வருகிறது.

இந்வருடமும் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சி மூலம் கண்தானம் விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையொட்டி பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் 2021 கண்கள் தானமாக பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து கண் தானம் செய்த 2021 படிவங்களும் விழிப்புணர்வு இரு வார தொடக்க நாளான இன்று டாக்டர் அகர்வால் கண் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக மாடத்தட்டுவிளை தலைமை பங்குத்தந்தை ஜெயக்குமார், ரோட்டரி கவர்னர் ஜெசிந்தா தர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்திய மருத்துவ கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவனை மண்டல மருத்துவ இயக்குனர் பேராசிரியர் டாக்டர். லயனல் ராஜ் கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில் உலகிலேயே திருநெல்வேலி டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை ஆற்றிய சாதனைகள் பற்றியும், கண் தானத்தின் அவசியத்தை குறித்தும் சிறப்புரையாற்றினார். முடிவில் மருத்துவமனை அஜிதா நன்றி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவமனை மேலாளர் பிரபு, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News