நெல்லையில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம்.: நாகர்கோவில் எம்எல்ஏ பங்கேற்பு

தமிழகத்தை பிரிக்கும் எண்ணம் பாரதிய ஜனதா கட்சிக்கு கிடையாது- நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி பேச்சு

Update: 2021-07-11 13:24 GMT

நெல்லையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி பங்கேற்றார்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

மாவட்ட பொதுச் செயலாளர் கணேசமூர்த்தி, வரவேற்றார். கன்னியாகுமரி கோட்ட பொறுப்பாளர் கிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி கூறியதாவது: தமிழகத்தை பிரிக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை. அந்த எண்ணம் திமுகவுக்கு வேண்டுமானால் இருக்கலாம். பாரதிய ஜனதா கட்சியில் பதவியை அடைய ஜெயிக்க வேண்டிய அவசியமில்லை. கட்சிக்கு விசுவாசமாகவும், தேச பக்தியுடனும் உழைத்தாலே போதும்.என்றார் அவர்.

Tags:    

Similar News