நெல்லையில் பாதுகாப்பு கோரி எஸ்பியிடம் தஞ்சமடைந்த கலப்பு திருமண ஜோடி

நெல்லையில் ஜாதி மறுப்பு, கலப்பு திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கோரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

Update: 2021-09-06 12:25 GMT

திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்.

ஜாதி மறுப்பு, கலப்பு திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

நெல்லையை அடுத்துள்ள சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர் ஜெனி இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக கவிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்ட பின்னர் தங்களுக்கு குடும்பத்தாரிடமிருந்து மிரட்டல் வருவதாக கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர். மேலும் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து கொலை மிரட்டல் வருவதால் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News