தூய சவேரியார் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி மினி மாரத்தான் ஓட்டம்

Mini Marathon - பாளையங்கோட்டை தூய சவேரியார் தனியார் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி மினி மாரத்தான் ஓட்டம். மாநகர துணை ஆணையர் சீனிவாசன் துவக்கி வைத்தார்.;

Update: 2022-07-02 04:32 GMT

நெல்லை மாநகர காவல் (கிழக்கு) துணை ஆணையர் சீனிவாசன்  மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். 

Mini Marathon -நெல்லை பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த தூய சவேரியார் தனியார் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அக்கல்லூரி சார்பில் இன்று விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகர காவல் (கிழக்கு) துணை ஆணையர் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்த மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்று ஓடினர். துணை ஆணையர் சீனிவாசனும் மாணவர்களுடன் சேர்ந்து மாரத்தான் ஓட்டத்தில் முழுமையாக ஓடினார்.

கல்லூரி முன்பு தொடங்கிய மாரத்தான் ஓட்டம் தொடர்ந்து பாளையங்கோட்டை ஏ.ஆர் லைன் வழியாக மகாராஜா நகர் ரவுண்டானா வரை சென்று பின்னர் அங்கிருந்து ஹைக்கிரவுண்ட் அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் கல்லூரிக்கு வந்தடைந்தனர். மது, கஞ்சா போன்ற போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாரத்தானில் பங்கேற்ற துணை ஆணையர் சீனிவாசன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இறுதியாக மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு கல்லூரி சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News