மேலப்பாளையம் கால்நடைச் சந்தை 6 மாதத்திற்குப்பின் திறக்க அனுமதி
மேலப்பாளையம் கால்நடைச் சந்தை ஆறு மாதங்களுக்கு பின் கொரோனா வழிமுறைகளுடன் திறப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது.;
மாநகராட்சி நிர்வாகத்தால் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள மேலப்பாளையம் கால்நடை சந்தை.
திருநெல்வேலி, மேலப்பாளையம் கால்நடை சந்தை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டனர்.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் போது தமிழக அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கால்நடை சந்தையும் கடந்த ஆறு மாதமாக பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால் தமிழக அரசு ஊரடங்கில் தளர்வு அறிவித்தது. இதனையடுத்து, கால்நடை வியாபாரிகள் மேலப்பாளையம் கால்நடை சந்தையை திறப்பதற்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
இதன்படி, மேலப்பாளையம் மாநகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் கால்நடை சந்தையை திறப்பதற்காக பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், மற்றும் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வினை தொடர்ந்து கால்நடை சந்தை வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, கொரோனா வழிகாட்டு நெறிமமுறைகளுடன் சந்தையை திறப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனால் சந்தையில் வியாபாரம் செய்யும் கால்நடை வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.