பாளையங்கோட்டை அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-03-25 10:15 GMT

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் (லேப் டெக்னீசியன்) சார்பில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நெல்லை மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், இராமநாதபுரம், விருதுநகர் உள்பட புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளில் 187 லேப் டெக்னீசியன்கள் பணியிடத்தை நிரப்ப வேண்டும், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பின்படி பதவி உயர்வு பெறும் நிலை 2 நுட்பனர்களுக்கான தகுதி பட்டியல் படி நிலை 1 பணி நியமனத்துக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும், கோவிட் பணியில் ஆரம்ப நிலையிலிருந்து அனைத்து பணிகளையும் மேற்கொண்டு பணியாற்றி வந்த ஆய்வக நுட்பனர்கள் உள்ளிட்ட இதர ஆய்வக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் லேப் டெக்னீசியன்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News