காவல் ஆணையர் அலுவலகத்தில் கபசுரகுடிநீர் வழங்கல்

Update: 2021-04-09 07:30 GMT

திருநெல்வேலியில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கொரோனா நோய் தொற்று திருநெல்வேலியில் சமீப நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் கபசுர குடிநீர் வழங்கினார். மேலும் கொரானா தொற்று வராமல் தடுப்பது சம்பந்தமாக அனைவருக்கும் ஆலோசனை வழங்கினார்.

Tags:    

Similar News