எப். எக்ஸ் கல்லூரியில் சர்வதேச அமைதி தின உறுதிமொழி ஏற்பு
வண்ணார்பேட்டை எப். எக்ஸ் கல்லூரியில் இளைஞர் செஞ்சுலுவை சங்கம் சார்பில், சர்வதேச அமைதி தினத்தையொட்டி, கல்லூரி முதல்வர்.முனைவர் வேல்முருகன் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.;
நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில், சர்வதேச அமைதி தினம் கடைபிடிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் வேல்முருகன் தலைமையில் மாணவர்கள், பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதனிடையே, கல்லூரியின் ஏபிஜே அப்துல்கலாம் வளாகத்தின் முன்பு, கல்லூரியின் இளைஞர் செஞ்சுலுவை சங்கம் சார்பில் சர்வதேச அமைதி தினத்தை கல்லூரி முதல்வர் வேல்முருகன் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் கடைபிடித்தனர். முதல் கட்டமாக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில், புறாக்கள் வானில் பறக்கவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, பேராசிரியர்கள், மாணவர்கள் அமைதி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் சகாரிய காபிரியேல், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சுலுவை சங்கச் செயலாளர் .டேவிட் அய்லிங் செய்திருந்தார்.