நெல்லை மாநகராட்சி பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.;
நெல்லையில் மாநகராட்சி பள்ளிகளில் நடைபெற்று வரும் கிருமி நாசினி தொளிக்கும் பணி.
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனையொட்டி, அரசு பள்ளிகளை திறப்பதற்கான ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவு படி, மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் ஆலோசனை படி மாநகராட்சி பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகி பிரமிளா மேற்பார்வையில், சுகாதார அலுவலர் ஷாகுல் ஹமீது தலைமையில் மேலப்பாளையம் மண்டல பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கி அனைத்து வகுப்பு அறைகளிலும் மாநகராட்சி ஊழியர்கள் கிரிமினாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். உடன் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.