புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு கல்வெட்டு வாசித்தல் பயிற்சி வகுப்பு

புத்தக கண்காட்சியில் அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கல்வெட்டு வாசித்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Update: 2022-03-26 14:33 GMT

பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கல்வெட்டு வாசித்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

பொருநை நெல்லை புத்தக கண்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்வாக நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. பயிற்சி வகுப்பின் பத்தாம் நாளான இன்று கல்வெட்டு வாசித்தல் பயிற்சி நடத்தப்பட்டது. மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி இப்பயிற்சியை துவங்கி வைத்தார்.

இப் பயிற்சியினை மதுரை பாண்டிய நாட்டு பண்பாட்டு மையத்தின் கல்வெட்டு ஆய்வாளர் உதய குமார் நடத்தினர். பழந்தமிழ் எழுத்து முறைகள் பற்றிய பயிற்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான கல்லூரி வரலாற்றுத் துறை , பள்ளி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் என இரு நூர்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து நாளை நீர் வண்ண ஓவியப் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News