கழிவு நீர் பாதாள சாக்கடையுடன் இணைக்ககோரி இந்தியா மூவ்மென்ட் மனு

மேலப்பாளையத்தில் கழிவுநீரை பாதாள சாக்கடையுடன் இணைக்க வலியுறுத்தி விமன் இந்தியா மூவ்மென்ட் சார்பில் மாநகராட்சியில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2021-11-09 09:15 GMT

விமன் இந்தியா மூவ்மென்ட மாவட்ட நிர்வாகிகள் மேலப்பாளையம் மண்டல அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் விமன் இந்தியா மூவ்மென்ட மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எ.பாத்திமா தலைமையில் மேலப்பாளையம் மண்டல அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

உடன் மாவட்ட தலைவர் மஹ்மூதா ரினோஷா ஆலிமா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிலோபர்ஹாஜி, எஸ்டிபிஐ கட்சி மேற்கு பகுதி செயலாளர் ஒ.எம்.எஸ.காதர்மீரான், பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகி சேக் தாவுத் உடன் இருந்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்தில் 29வது வார்டு, 1ம் தெரு முதல், 12ம் தெரு வரை அமைந்துள்ள கழிவுநீர் ஓடை மழைக்காலங்களில் தெருக்களில் ஊற்று போல் பொங்கி ஓடுகிறது.

வெயில் காலத்தில் கண்ணிமார்குளத்தில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது‌‌. ஆகையால் இந்த கழிவுநீர் ஓடையை அம்பை ரோட்டில் அமைந்துள்ள பாதாள சாக்கடையுடன் இணைக்கும் படி மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News