கருங்குளம் பகுதியில் எஸ்டிபிஐ வேட்பாளர் முகம்மது முபாரக் வாக்கு சேகரிப்பு

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி கருங்குளம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர் முகம்மது முபாரக் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2021-04-03 02:00 GMT

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியின் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர் முகம்மது முபாரக் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று காலையில் தியாகராஜநகர், டிவிஎஸ் நகர், போன்ற பகுதிகளில்பிரச்சாரம் மேற்கொண்ட அவர் மாலையில் 34வது வார்டு அன்னை ஹாஜிரா நகர், கருங்குளம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அங்கு அவருக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட பிரதிநிதி வேம்பையா, பகுதி துணை செயலாளர் கற்பகராஜா வட்ட செயலாளர்கள் முத்துசாமி, அழகுராஜா ரெட்டைமுத்து, உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

அப்போது பேசிய அவர் கருங்குளம் பகுதிகளில் பல ஆண்டுகளாக நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதியளித்தார். மேலும் இளைஞர்களின் அறிவு திறனை மேம்படுத்த வார்டு வாரியாக பொது நூலகம் அமைப்பேன் எனவும் இங்குள்ள அடிப்படை பிரச்சனைகளான சாலைவசதி, கழிவு நீர் ஓடைவசதி, குடிநீர் தேக்க தொட்டி அமைப்பேன் என வாக்குறுதியளித்தார்.

இந்த பிரச்சார நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட துணை தலைவர்ஷாகுல் ஹமீத் உஸ்மானி, மாவட்ட பொது செயலாளர் ஹயாத் முஹம்மது, எஸ்.டி.டி.யூ பீடி தொழிலார்கள் நல சங்க ஒருங்கிணைப்பாளர் சுல்தான் பாஷா, அமமுக எம்.சி பாபு, பகுதி செயலாளர் ஹைதர் அலி வட்ட செயலாளர்கள் கபடி காஜா, அப்துல் கோயா, நேசம் ரப்பானி அபுபக்கர், அம்ஜத்பாஷா, எஸ்.டி.பி.ஐ தொகுதி செயலாளர் சலீம் தீன், தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் கல்வத், செயற்குழு உறுப்பினர் ஜெபா, வார்டு நிர்வாகிகள் வதூத் கான்,ஞானியர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News