புகார் மனுக்கள் மீது மனித உரிமை ஆணைய நீதிபதி விசாரணை
மனித உரிமைகளை மீறிய போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மீதான 52 புகார்களை மனித உரிமை ஆணைய நீதிபதி விசாரணை நடத்தினார்
நெல்லையில் மனிதஉரிமை ஆணைய நீதிபதி துரை. ஜெயச்சந்திரன் போலீசார் மற்றும் அரசு உயரதிகாரிகள் மீது கூறப்பட்ட 52 புகார்கள் குறித்து இன்று விசாரணை நடத்தினார்.
தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மனித உரிமைகளை மீறிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் மீது கூறப்பட்ட 52 புகார்கள் குறித்து இன்று தமிழக மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடத்தினார்.அப்போது நீதிபதி முன்பு ஆஜராகிய போலீஸ் அதிகாரிகளிடம், புகார்தாரர்களின் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் நீதிபதி முன் குறுக்கு விசாரணை நடத்தினர்.மனித உரிமை ஆணைய நீதிபதி விசாரணைக்காக தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆஜரானார்கள்.