நெல்லையில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி நூதன பாேராட்டம்

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கோரி விநாயகர் சிலை மூலம் மனு கொடுக்கும் வகையில் இந்து மக்கள் கட்சியினர் நூதன போராட்டம்.

Update: 2021-09-06 08:56 GMT

நெல்லையில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கோரி விநாயகர் சிலை மூலம் மனு கொடுக்கும் வகையில் இந்து மக்கள் கட்சியினர் நூதன போராட்டம்.

கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் விநாயக சதுர்த்தி அன்று சிலை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய அனுமதியளிக்க வேண்டும் எனக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து நூதன போராட்டம் நடைபெற்றது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பொதுவெளியில் கொண்டாடுவதற்கும், சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் இன்று திருநெல்வேலி ஆட்சியர் வளாகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் வருகின்ற 10 ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், 14 ம் தேதி சிலைகளை தாமிரபரணி ஆற்றில் கரைப்பதற்கும் அனுமதி கேட்டு கையில் கொண்டு வந்த விநாயகர் சிலை மூலம் மனு கொடுக்கும் வகையில் நூதன போராட்டமாக இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தினர்.

மேலும் மனுநீதி நாள் முகாமை முன்னிட்டு ஆட்சியர் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் அவர்கள் கைகளில் கொண்டு வந்த மூன்று அடி விநாயகர் சிலையில் வைக்கப்பட்டுள்ள மனுவை செலுத்தினர். பின்னர் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Tags:    

Similar News