பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவ இந்து மக்கள் கட்சி கோரிக்கை

தமிழகத்தில் பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு, பல்வேறு உதவிகள் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.;

Update: 2021-12-03 10:30 GMT

பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பல்வேறு உதவிகள் கோரி, இந்து மக்கள் கட்சியினர், நெல்லை ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தமிழகத்தில் பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு,  தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் உடையார் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

அவர்கள் கூறுகைய்ல், தமிழகத்தில் பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இலவச பஸ் வசதி, சுங்கக் கட்டணம் விலக்கு, ஏழை ஐயப்ப பக்தர்களுக்கு ஹஜ்  யாத்திரை, ஜெருசலம் யாத்திரை போல் உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோரி, தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்திருந்தனர்.

Tags:    

Similar News