புலிகள் தினத்தை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு ஓவியப்போட்டி

அரசு அருங்காட்சியகத்தில் புலிகள் தினத்தையொட்டி நடைபெற்ற ஓவிய படைப்புகளை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-08-04 10:42 GMT

அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு ஓவிய கண்காட்சி.

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு, நெல்லை அரசு அருங்காட்சியகம் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 320 மாணவ, மாணவிகள் தங்களின் படைப்புகளை அருங்காட்சியகத்திற்கு அனுப்பி இருந்தனர். அவர்களின் படைப்புகள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சியை காண வரும் பொதுமக்கள், அதில் உள்ள சிறந்த மூன்று படைப்புகளை தேர்ந்தெடுப்பார்கள். பொதுமக்கள் அனைவரும் வந்து இக்கண்காட்சியை பார்வையிட்டு இளம் ஓவியர்களை தேர்ந்தெடுக்கலாம் என நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News