நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு
நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு என தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குரல் என்ற மாத இதழ் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத இதழின் பதிப்பாளர் ஆசிரியராக நகராட்சி மற்றும் மாநகராட்சி கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளரான திருநெல்வேலியை சார்ந்த இரா. சீத்தாராமன் உள்ளார். இந்த மாத இதழின் சார்பாக 10 மற்றும் +2 வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்ற நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசளித்து பாராட்டி வருகிறன்றனர்.
கடந்த 11 ஆண்டுகளாக இத்தகைய விழா தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்று வந்துள்ளது. இந்த ஆண்டு இந்த விழா திருநெல்வேலியில் பாளையங்கோட்டை மாநகராட்சி திருமண மண்டபத்தில் மாநகராட்சி கூட்டமைப்பின் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், நகராட்சி கூட்டமைப்பின் தலைவர் பாலசந்தர் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் +2 வகுப்பில் மாநில அளவிலான மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகள் திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார அலுவலர் சாகுல் கமீது மகன் செல்வன் முகம்மது யாசர் மைதீன் முதல் பரிசும், திருநெல்வேலி மாநகராட்சி இளநிலை உதவியாளர் கண்ணன் மகன் கார்த்திக் ராஜ் 2-வது பரிசும் வழங்கப்பட்டது.
நகராட்சி பணியாளர்களின் குழந்தைகளின் கூத்தாநல்லூர் நகராட்சி தாமோதரன் லாவண்யா முதல் பரிசினையும், நாமக்கல் நகராட்சி சுகவனம் புதல்வி சாதனா 2-வது பரிசினையும், சிபிஎஸ்சி தேர்வில் தஞ்சாவூர் மாநகராட்சி சங்கரவடிவேலு புதல்வன் செல்வன் சுபனேஷ் முதல் பரிசினையும், நாகர்கோவில் மாநகராட்சி துர்காதேவி புதல்விபெமிலா ரோகிணி 2-வது பரிசினையும் பெற்றார்கள். இவர்களுக்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி கூட்டமைப்பு தலைவர் பிலிப் அந்தோணி நன்றி கூறினார்.