நெல்லையில் விநாயகர் சதுர்த்திக்கு தயாராகி வரும் விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட அரசு அனுமதி அளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் நெல்லையில் விற்பனைக்கு தயாராகி வரும் விநாயகர் சிலைகள்.;

Update: 2021-08-25 09:20 GMT

நெல்லையில் விற்பனைக்கு தயாராகி வரும் விநாயகர் சிலைகள்

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவலை முன்னிட்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை.தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி வழிபாட்டு தலங்கள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அரசு அனுமதி அளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ராஜஸ்தானை சேர்ந்த தொழிலாளர்கள் 30 பேர் பாளையங்கோட்டை சமாதான புரத்தில் ராஜ விநாயகர், தாமரை பூவில் வீற்றிருக்கும் விநாயகர், சூரிய விநாயகர், மூஞ்சுரு விநாயகர், மயில் வாகன விநாயகர் உட்பட பல்வேறு விதமான விநாயகர் சிலைகளை ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரை சாக்பீஸ், தேங்காய் நாரை பயன்படுத்தி தயார் செய்து வர்ணம் பூசி தயாரித்துள்ளனர்.  சிலைகள் உயரத்திற்கு ஏற்ப ரூபாய் 100 முதல் ரூபாய் 25 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று சிலை கரைப்புக்கு அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் சிலைகள் விற்பனையாகும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதுகுறித்து ராஜஸ்தானை சேர்ந்த தன்ராம் கூறுகையில்:-

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா நடக்கவில்லை. இந்த ஆண்டு அரசு அனுமதி அளிக்கும் என்ற எதிர்பார்ப்பில் விநாயகர் சிலைகளை தயார் செய்துள்ளோம். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி இல்லை, என்பதால் விற்பனை இல்லாமல் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். மேலும் குடோன் வாடகை மற்றும் உணவுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே அரசு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடு வருவதற்கு அனுமதி அளித்தால் தான் எங்களுடைய வாழ்வாதாரம் சகஜ நிலைக்கு வரும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News