அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு புத்தொளி பயிற்சி

கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பாளையங்கோட்டை வரலாறு பற்றியும், அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால பொருட்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

Update: 2022-04-19 11:32 GMT

பாளை அருங்காட்சியக புத்தொளி பயிற்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

உலக பாரம்பரிய நாளை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் அரும்பொருட்கள் பாதுகாப்பு என்கிற தலைப்பில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு புத்தொளி பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி அப்பயிற்சியின் முதல் நாளான இன்று நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி பாளையங்கோட்டையின் வரலாறு பற்றியும், அரசு அருங்காட்சியகத்தில் உள்ள கலை பொருள்களின் சிறப்புகள் பற்றியும் மாணவ- மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு அருங்காட்சியகம் முழுவதும் சுற்றிக்காட்டப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரும் பொருள்களின் முக்கியத்துவங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

இப்பயிற்சி முகாமில் நெல்லை ,தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 80 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News