பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தாளையொட்டி இலவச ஆட்டோ சவாரி

நெல்லை வண்ணாரப்பேட்டையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தாளையொட்டி ஆட்டோ ஓட்டுநர் இலவசமாக சவாரி மேற்கொண்டுள்ளார்.

Update: 2022-06-04 10:32 GMT

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிறந்தாளையொட்டி நெல்லையில் இலவசமாக ஆட்டோ ஓட்டி வரும் ஆட்டோ ஓட்டுனர்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சக பாஜக நிர்வாகிகள் போலவே அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகினாலும் கூட ஒரு இளம் அதிகாரியின் அரசியல் வாழ்க்கை என்பதால் இளைஞர்கள் அண்ணாமலை மீது பெரும் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.

இதுபோன்ற சூழலில் அண்ணாமலை பிறந்தநாளை பாஜகவினர் இன்று ஆரவராமாக கொண்டாடி வரும் நிலையில், நெல்லையில் அண்ணாமலை ரசிகரான ஆட்டோ ஓட்டுநர் ரஜினி முருகன் தனது ஆட்டோவில் இன்று ஒருநாள் இலவச சேவை செய்து தனது தலைவன் அண்ணாமலைக்கு பிறந்தாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினி முருகன் ஏற்கனவே திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வெறிபிடித்த ரசிகராக இருந்தவர். சுமார் 20 ஆண்டுகளாக அவரது ரசிகராக இருந்த நிலையில் சக ரசிகர்களை போல் ரஜினியின் அரசியல் வருகையை பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தார். தனது அரசியல் வாழ்க்கைக்கு ரஜினிகாந்த் நிரந்தரமாக முழுக்கு போட்டதையடுத்து அவர் மீது ஏற்பட்ட வெறுப்பால் ஆட்டோ ஓட்டுனர் ரஜினி முருகன் அவரது ரசிகராக நீடிக்க விரும்பாமல் ஐபிஎஸ் பதவியை துறந்துவிட்டு அரசியலில் நுழைந்த அண்ணாமலையின் ரசிகராக மாறினார்.

அதன்படி அண்ணாமலை மக்கள் மன்றம் என்ற ஒரு இயக்கத்தையும் தொடங்கினார். தொடர்ந்து இன்று அண்ணாமலையின் பிறந்த நாளன்று தனது தலைவனுக்கு நூதன முறையில் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக ஆட்டோவில் பயணிகளை ஏற்றி செல்கிறார்.

இதுகுறித்து ரஜினி முருகன் கூறுகையில்,  அண்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இலவசமாக ஆட்டோ ஓட்டுகிறேன். மக்களுக்காக தொண்டு செய்கிறவர் பின்னால் என்றும் நிற்பேன். ரஜினி வருவார் என எதிர்பார்த்தேன் வரவில்லை அண்ணாமலை தன் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்து வருவதால் அவர் பின்னாடி நிற்கிறேன் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News